Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

இரவு

Mendicancy

பொருட்பால் · WealthKural 1051 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1051

Tamil original

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்

அவர்பழி தம்பழி அன்று.

Read the sounds · Transliteration

Irakka Iraththakkaark Kaanin Karappin
Avarpazhi Thampazhi Andru

Understand the idea · English meaning

If you meet with those that may be begged of, you may beg; (but) if they withhold (their gift) it is their blame and not yours.

Connect it to life today · Modern meaning

If you ask someone known to be able to help and they pretend they have nothing, the shame is theirs, not yours. When a capable sponsor refuses a deserving request while hiding their means, do not blame the person who asked.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி, தமக்கு பழி அன்று.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஏதும்‌ இல்லா நிலையில், எவரிடம் ஏற்பது இழிவாகாது என்று தோன்றுகிழதோ அவரிடம் பிச்சை ஏற்கலாம்; அவர் தர மறுத்து, மறைத்தால் பழி அவர்க்கே; இரப்பவர்க்கு அன்று.

Kalaignar

கலைஞர் : கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல