Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

காதற் சிறப்புரைத்தல்

Declaration of Love"s special Excellence

காமத்துப்பால் · LoveKural 1123 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1123

Tamil original

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்

திருநுதற்கு இல்லை இடம்.

Read the sounds · Transliteration

Karumaniyir Paavaainee Podhaayaam Veezhum
Thirunudharku Illai Itam

Understand the idea · English meaning

O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair-browed beloved.

Connect it to life today · Modern meaning

The speaker jokingly asks the image in his pupil to leave because there is no room for it; the beloved fills his sight and thoughts completely. Someone deeply in love may notice that every photo, song, or place brings the same person to mind.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : என் கருமணிக்குள் இருக்கும் பாவையே! நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு என் கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை.

Kalaignar

கலைஞர் : நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு!