Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

கண்விதுப்பழிதல்

Eyes consumed with Grief

காமத்துப்பால் · LoveKural 1173 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1173

Tamil original

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்

இதுநகத் தக்க துடைத்து.

Read the sounds · Transliteration

Kadhumenath Thaanokkith Thaame Kaluzhum
Ithunakath Thakka Thutaiththu

Understand the idea · English meaning

They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at ?

Connect it to life today · Modern meaning

My eyes rushed eagerly to see him, and now they are the ones crying. Their change is almost laughable. The same eyes that celebrated a meeting can make you cry when the person is gone.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.

Kalaignar

கலைஞர் : தாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள், இன்று தாமாகவே அழுகின்றன இது நகைக்கத்தக்க ஒன்றாகும்