Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

உறுப்புநலன் அழிதல்

Wasting Away

காமத்துப்பால் · LoveKural 1239 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1239

Tamil original

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற

பேதை பெருமழைக் கண்.

Read the sounds · Transliteration

Muyakkitaith Thanvali Pozhap Pasapputra
Pedhai Perumazhaik Kan

Understand the idea · English meaning

When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow.

Connect it to life today · Modern meaning

Even a breath of cool air slipping between the lovers during an embrace makes her large eyes lose their color. When someone is already anxious about separation, the smallest interruption can feel like abandonment.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : (அப்படி) நான் கையை மெல்ல எடுத்ததால் எங்கள் தழுவலுக்கு இடையே குளிர்ந்த சிறுகாற்று நுழைந்தது. இந்த இடைவெளியைக்கூடப் பொறுக்காமல் அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் இழந்தன. இப்போது அவை எப்படி இருக்கின்றனவோ?

Kalaignar

கலைஞர் : இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன