Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

நெஞ்சோடு புலத்தல்

Expostulation with Oneself

காமத்துப்பால் · LoveKural 1298 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1298

Tamil original

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்

உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

Read the sounds · Transliteration

Ellin Ilivaamendru Enni Avardhiram
Ullum Uyirkkaadhal Nenju

Understand the idea · English meaning

My soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him.

Connect it to life today · Modern meaning

Love remembers a beloved's good qualities because treating that person with contempt would also diminish the self. Even after a separation, someone may speak respectfully instead of mocking the person they once loved.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உயிர்மேல் காதலை உடைய என் நெஞ்சு, நாமும் அவரை இகழ்ந்தால் பிறகு நமக்கும் இழிவுவரும் என்று எண்ணி, அவர் வரவையும் கலவியையுமே நினைத்து நின்றது.

Kalaignar

கலைஞர் : பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்