Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

ஈகை

Giving

அறத்துப்பால் · VirtueKural 222 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 222

Tamil original

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று.

Read the sounds · Transliteration

Nallaaru Eninum Kolaldheedhu Melulakam
Illeninum Eedhale Nandru

Understand the idea · English meaning

To beg is evil, even though it were said that it is a good path (to heaven). To give is good, even though it were said that those who do so cannot obtain heaven.

Connect it to life today · Modern meaning

Taking from others is never truly admirable, even when people try to dress it up as acceptable; giving is always the better path, whatever it earns you or doesn't. The act of giving matters more than any reward attached to it. For example, someone who quietly gives what they can, expecting nothing back, lives a fuller life than someone who's always angling to receive.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.

Kalaignar

கலைஞர் : பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும் கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்