Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

கூடா ஒழுக்கம்

Imposture

அறத்துப்பால் · VirtueKural 277 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 277

Tamil original

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி

முக்கிற் கரியார் உடைத்து.

Read the sounds · Transliteration

Purangundri Kantanaiya Renum Akangundri
Mukkir Kariyaar Utaiththu

Understand the idea · English meaning

(The world) contains persons whose outside appears (as fair) as the (red) berry of the Abrus, but whose inside is as black as the nose of that berry.

Connect it to life today · Modern meaning

Some people look bright and respectable on the outside but carry a dark heart within, like a red berry with a black tip. Appearance alone is not proof of character. For example, a charming classmate may seem kind until their private actions reveal deliberate cruelty.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : குன்றிமணியின் மேனியைப் போல் வெளித் தோற்றத்தில் நல்லவராயும், குன்றிமணியின் மூக்கு கறுத்து இருப்பதுபோல் மனத்தால் கரியவராகவும் வாழ்வோர் இவ்வுலகில் இருக்கவே செய்கின்றனர்.

Kalaignar

கலைஞர் : வெளித்தோற்றத்துக்குக் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு