Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

கொல்லாமை

Not killing

அறத்துப்பால் · VirtueKural 328 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 328

Tamil original

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்

கொன்றாகும் ஆக்கங் கடை.

Read the sounds · Transliteration

Nandraakum Aakkam Peridheninum Saandrorkkuk
Kondraakum Aakkang Katai

Understand the idea · English meaning

The advantage which might flow from destroying life in sacrifice, is dishonourable to the wise (who renounced the world), even although it should be said to be productive of great good.

Connect it to life today · Modern meaning

Even a great benefit gained by killing is considered dishonorable by the wise. A result cannot become truly good when it depends on destroying life. For example, a profitable plan that succeeds by treating living beings as disposable is not something to admire.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.

Kalaignar

கலைஞர் : பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்