Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

அவா அறுத்தல்

Curbing of Desire

அறத்துப்பால் · VirtueKural 370 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 370

Tamil original

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்.

Read the sounds · Transliteration

Aaraa Iyarkai Avaaneeppin Annilaiye
Peraa Iyarkai Tharum

Understand the idea · English meaning

The removal of desire, whose nature it is never to be satisfied, will immediately confer a nature that can never be changed.

Connect it to life today · Modern meaning

Craving is never fully satisfied; letting it go brings a steadier kind of contentment. For example, ending the habit of endless shopping can make room for gratitude and peace with what is already enough.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.

Kalaignar

கலைஞர் : இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்