Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

சுற்றந் தழால்

Cherishing Kinsmen

பொருட்பால் · WealthKural 527 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 527

Tamil original

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள.

Read the sounds · Transliteration

Kaakkai Karavaa Karaindhunnum Aakkamum
Annanee Raarkke Ula

Understand the idea · English meaning

The crows do not conceal (their prey), but will call out for others (to share with them) while they eat it; wealth will be with those who show a similar disposition (towards their relatives).

Connect it to life today · Modern meaning

Like a crow calling others to share its food, people should not hide every good thing for themselves. For example, a colleague who shares an opportunity with the team helps everyone grow instead of keeping all the advantage.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : காக்கை தன் உணவை மறைக்காமல், தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற குணம் உடையவர்க்கே செல்வமும் உள ஆகும்.

Kalaignar

கலைஞர் : தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும் அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு