Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

அமைச்சு

The Office of Minister of state

பொருட்பால் · WealthKural 638 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 638

Tamil original

அறிகொன்று அறியான் எனினும் உறுதி

உழையிருந்தான் கூறல் கடன்.

Read the sounds · Transliteration

Arikondru Ariyaan Eninum Urudhi
Uzhaiyirundhaan Kooral Katan

Understand the idea · English meaning

Although the king be utterly ignorant, it is the duty of the minister to give (him) sound advice.

Connect it to life today · Modern meaning

Even if a ruler is ignorant or refuses to listen, a minister must still offer firm and beneficial advice. For example, a team member should respectfully warn a leader about a serious risk instead of staying silent to avoid discomfort.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் க‌டமையாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம் கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர் கடமையாகும்.

Kalaignar

கலைஞர் : சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்