Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

வினைத்தூய்மை

Purity in Action

பொருட்பால் · WealthKural 655 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 655

Tamil original

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று.

Read the sounds · Transliteration

Etrendru Iranguva Seyyarka Seyvaanel
Matranna Seyyaamai Nandru

Understand the idea · English meaning

Let a minister never do acts of which he would have to grieve saying, “what is this I have done”; (but) should he do (them), it were good that he grieved not.

Connect it to life today · Modern meaning

Do not choose actions you will later regret; if you make such a mistake, learn from it and do not repeat it. After sending a hurtful message, apologize and change how you speak.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று வருந்தும் படியான செயல்களைச் செய்யாது விடுக; ஒருவேளை தவறாகச் செய்துவிட்டால், திரும்பவும் அதைச் செய்யாது இருப்பது நல்லது.

Kalaignar

கலைஞர் : `என்ன தவறு செய்துவிட்டோம்' என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று