Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

வினைத்தூய்மை

Purity in Action

பொருட்பால் · WealthKural 659 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 659

Tamil original

அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பா லவை.

Read the sounds · Transliteration

Azhak Konta Ellaam Azhappom
Izhappinum Pirpayakkum Narpaa Lavai

Understand the idea · English meaning

All that has been obtained with tears (to the victim) will depart with tears (to himself); but what has been by fair means; though with loss at first, will afterwards yield fruit.

Connect it to life today · Modern meaning

Wealth taken by making others suffer will leave amid suffering, while honestly earned wealth can bear fruit even after a setback. A fair business can recover after a bad season; money taken from workers cannot bring lasting peace.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பிறர் அழ அவரிடம் இருந்து கவர்ந்த பொருள் எல்லாம் நாம் அழ, நம்மை விட்டுப் போய்விடும். செயல் சுத்தத்தால் பெற்ற பொருளை நாம் இழந்தாலும் அவை நமக்குத் திரும்பவும் பலன் கொடுக்கும்.

Kalaignar

கலைஞர் : பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும் நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்