Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

குறிப்பறிதல்

The Knowledge of Indications

பொருட்பால் · WealthKural 704 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 704

Tamil original

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை

உறுப்போ ரனையரால் வேறு.

Read the sounds · Transliteration

Kuriththadhu Kooraamaik Kolvaaro Tenai
Uruppo Ranaiyaraal Veru

Understand the idea · English meaning

Those who understand one’s thoughts without being informed (thereof) and those who do not, may (indeed) resemble one another bodily; still are they different (mentally).

Connect it to life today · Modern meaning

People may look alike, but they differ greatly in their ability to understand what others mean without being told. In a group project, one student catches a partner's hesitation while another misses every hint.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவன் மனதில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவார்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஒருவன் மனத்துள் நினைப்பதை அவன் சொல்லாமலேயே அறியம் ஆற்றல் உடையவரோடு அந்த ஆற்றல் இல்லாதவர் உறுப்பால் ஒத்தவர்; அறிவால் வேறுபட்டவர் ஆவார்.

Kalaignar

கலைஞர் : உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர் மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள்