குறிப்பறிதல்
The Knowledge of Indications
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Nunniyam Enpaar Alakkungol Kaanungaal
Kannalladhu Illai Pira
Understand the idea · English meaning
The measuring-rod of those (ministers) who say “we are acute” will on inquiry be found to be their (own) eyes and nothing else.
Connect it to life today · Modern meaning
For people who claim to understand subtle thoughts, the eyes are the measuring tool they rely on. An experienced interviewer may notice a candidate's eye movement and expression while listening, without treating one glance as proof.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல் வேறு இல்லை.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : நாங்கள் நுண் அறிவை உடையவர்கள் என்று கூறிக்கொள்பவர், பிறர் மனக்கருத்தை அளந்து அறியப் பயன்படுத்தும் அளவு கருவி எது என்று ஆய்ந்து பார்த்தால் அது கண்ணே அன்றி வேறு இல்லை.
Kalaignar
கலைஞர் : நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை