Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

அவை அறிதல்

The Knowledge of the Council Chamber

பொருட்பால் · WealthKural 715 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 715

Tamil original

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்

முந்து கிளவாச் செறிவு.

Read the sounds · Transliteration

Nandrendra Vatrullum Nandre Mudhuvarul
Mundhu Kilavaach Cherivu

Understand the idea · English meaning

The modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the best among all (one’s) good qualities.

Connect it to life today · Modern meaning

Among people wiser than you, the best quality is the humility to listen instead of rushing to speak. In a class discussion, let the expert finish before adding your own point.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும நல்லது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தன் அறிவினுக்கும் மேலான அறிஞர் கூடியுள்ள அவையில் அவர் பேசுவதற்கு முன்பாகப் பேசாமல் அடங்கி இருப்பது, நல்லது என்று சொல்லப்பட்ட குணங்களுள் எல்லாம் நல்லது.

Kalaignar

கலைஞர் : அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்