Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

அவை அறிதல்

The Knowledge of the Council Chamber

பொருட்பால் · WealthKural 719 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 719

Tamil original

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்

நன்குசலச் சொல்லு வார்.

Read the sounds · Transliteration

Pullavaiyul Pochchaandhum Sollarka Nallavaiyul
Nankusalach Chollu Vaar

Understand the idea · English meaning

Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low

Connect it to life today · Modern meaning

Do not offer valuable guidance to an audience that only mocks or misuses it; even good words can be wasted there. If a group turns every thoughtful suggestion into a joke, save the advice for people ready to act on it.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைப் மனதில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நல்லவர் கூடி இருந்த அவையில் நல்ல பொருள்களைக் கேட்பவர் மனம் ஏற்கப் பேசும் திறம் படைத்த பேச்சாளர், அவற்றை ஏற்கும் திறம் அற்ற சிறியோர் கூடி இருக்கும் அவையில் மறந்தும் பேச வேண்டா.

Kalaignar

கலைஞர் : நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம்