Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

நாடு

The Land

பொருட்பால் · WealthKural 737 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 737

Tamil original

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

Read the sounds · Transliteration

Irupunalum Vaaindha Malaiyum Varupunalum
Vallaranum Naattirku Uruppu

Understand the idea · English meaning

The constituents of a kingdom are the two waters (from above and below), well situated hills and an undestructible fort.

Connect it to life today · Modern meaning

A country's foundations include dependable water, useful high ground and natural resources, rainfall, and strong defenses. A town preparing for emergencies needs reservoirs, protected terrain, and secure shelters, not just buildings.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஆற்றுநீரும், ஊற்றுநீரும் உயரமும் அகலமும் உடைய வாய்ப்பான மலையும், மழை நீரும், அழிக்க முடியாத கோட்டையும் நாட்டிற்குத் தேவையான உறுப்புகளாம்.

Kalaignar

கலைஞர் : ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும்