Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

நாடு

The Land

பொருட்பால் · WealthKural 739 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 739

Tamil original

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளந்தரு நாடு.

Read the sounds · Transliteration

Naatenpa Naataa Valaththana Naatalla
Naata Valandharu Naatu

Understand the idea · English meaning

The learned say that those are kingdom whose wealth is not laboured for, and those not, whose wealth is only obtained through labour.

Connect it to life today · Modern meaning

The best country has resources that sustain it naturally, rather than depending on endless hardship to produce every benefit. People value a place with reliable water, fertile land, and steady energy more than one where basic needs require constant struggle.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதிக உற்பத்தியைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர்; தேடிவருந்திப் பெறும் நிலையில் இருப்பது நாடு அன்று.

Kalaignar

கலைஞர் : இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளைவிட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்