Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

படைமாட்சி

The Excellence of an Army

பொருட்பால் · WealthKural 761 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 761

Tamil original

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்

வெறுக்கையுள் எல்லாம் தலை.

Read the sounds · Transliteration

Uruppamaindhu Ooranjaa Velpatai Vendhan
Verukkaiyul Ellaam Thalai

Understand the idea · English meaning

The army which is complete in (its) parts and conquers without fear of wounds is the chief wealth of the king.

Connect it to life today · Modern meaning

A ruler's greatest resource is a complete, disciplined force that can face danger without losing courage. Strength depends on readiness, not just numbers. For example, an emergency team is valuable when it has the right skills, equipment, and calm people ready to act.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தரைப்படை, கப்பல் படை, விமானப்படை, காவல்துறை என நாட்டைக் காப்போர் பிரிவினால் நிறைந்து, போர்க்களத்தில் புண்பட அஞ்சாது, பகைவரை வெல்லும் படையே ஆட்சியாளரின் செல்வத்துள் எல்லாம் முதன்மையான செல்வம் ஆகும்.

Kalaignar

கலைஞர் : எல்லா வகைகளும் நிறைந்ததாகவும், இடையூறுகளுக்கு அஞ்சாமல் போரிடக்கூடியதாகவும் உள்ள படை ஓர் அரசின் மிகச்சிறந்த செல்வமாகும்