Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

படைச் செருக்கு

Military Spirit

பொருட்பால் · WealthKural 775 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 775

Tamil original

விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்

ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

Read the sounds · Transliteration

Vizhiththakan Velkona Teriya Azhiththimaippin
Ottandro Vanka Navarkku

Understand the idea · English meaning

Is it not a defeat to the valiant to wink and destroy their ferocious look when a lance in cast at them (by their foe) ?

Connect it to life today · Modern meaning

A warrior who claims courage should not lose heart at the first weapon thrown by an opponent. The couplet treats even a moment of flinching as a failure of resolve. For example, someone who accepts a difficult role should not abandon it as soon as criticism appears.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பகைவரைச் சினந்து பார்க்கும் கண், அவர்கள் எறியும் வேலைப் பார்த்து மூடித் திறந்தாலும், சிறந்த வீரர்க்கு அதுவே புறங் கொடுத்தலாகும்.

Kalaignar

கலைஞர் : களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும்