Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

நட்பு

Friendship

பொருட்பால் · WealthKural 785 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 785

Tamil original

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாங் கிழமை தரும்.

Read the sounds · Transliteration

Punarchchi Pazhakudhal Ventaa Unarchchidhaan
Natpaang Kizhamai Tharum

Understand the idea · English meaning

Living together and holding frequent intercourse are not necessary (for friendship); (mutual) understanding can alone create a claim for it.

Connect it to life today · Modern meaning

People do not need to live together or meet constantly to become true friends. Mutual understanding can create closeness on its own. For example, two students who support each other online and share the same values may form a real friendship despite living far apart.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.

Kalaignar

கலைஞர் : இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது