Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

நட்பாராய்தல்

Investigation in forming Friendships

பொருட்பால் · WealthKural 796 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 796

Tamil original

கேட்டினும் உண்டோ ர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்.

Read the sounds · Transliteration

Kettinum Untor Urudhi Kilaignarai
Neetti Alappadhor Kol

Understand the idea · English meaning

Even in ruin there is some good; (for) it is a rod by which one may measure fully (the afection of one’s) relations.

Connect it to life today · Modern meaning

Hard times contain one useful lesson: they reveal who your real friends are. Trouble measures loyalty more clearly than easy days do. For example, when a family faces sudden financial difficulty, the people who offer practical help show the depth of their care.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கேடு வந்த போதும் ஒருவகை நன்மை உண்டு, அக் கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டிஅளந்து பார்ப்பதொரு கோலாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : எவன் நமக்கு உற்ற நண்பன் என்பதை நீட்டி அளந்து கொள்ளும் அறிவு நம் துன்பத்தில் உண்டு.

Kalaignar

கலைஞர் : தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது