Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

தீ நட்பு

Evil Friendship

பொருட்பால் · WealthKural 816 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 816

Tamil original

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்

ஏதின்மை கோடி உறும்.

Read the sounds · Transliteration

Pedhai Perungezheei Natpin Arivutaiyaar
Edhinmai Koti Urum

Understand the idea · English meaning

The hatred of the wise is ten-million times more profitable than the excessive intimacy of the fool.

Connect it to life today · Modern meaning

The opposition of a wise person can help more than the close friendship of a fool. A thoughtful critic who challenges your plan may do you more good than a reckless friend who always agrees.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அறிவற்றவனின் மிக நெருக்கமான நட்பைக் காட்டிலும் அறிவுடையார்களின் பகை, கோடி நன்மையாம்.

Kalaignar

கலைஞர் : அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்