Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கூடா நட்பு

Unreal Friendship

பொருட்பால் · WealthKural 821 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 821

Tamil original

சீரிடம் காணின் எறிதற்குப் பட் டடை

நேரா நிரந்தவர் நட்பு.

Read the sounds · Transliteration

Seeritam Kaanin Eridharkup Pattatai
Neraa Nirandhavar Natpu

Understand the idea · English meaning

The friendship of those who behave like friends without inward afection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself.

Connect it to life today · Modern meaning

A person who pretends to be your friend without caring about you may turn that closeness into a weapon when an opportunity appears. If a coworker collects personal information while acting close, be careful about what you share.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது.

Kalaignar

கலைஞர் : மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும்