பகைத்திறம் தெரிதல்
Knowing the Quality of Hate
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Tamil original
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
Read the sounds · Transliteration
Thandhunai Indraal Pakaiyirantaal Thaanoruvan
Indhunaiyaak Kolkavatrin Ondru
Understand the idea · English meaning
He who is alone and helpless while his foes are two should secure of them as an agreeable help one (to himself).
Connect it to life today · Modern meaning
When you are alone, without allies, and surrounded by two opponents, turn one of them into a friendly ally. For example, two competing teams may resolve their differences so they can face a larger problem together.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : தமக்கோ உதவும் நண்பர் இல்லை; தம்மைப் பகைப்பவரோ இருவர்; அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும் இருவருள் ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க.
Kalaignar
கலைஞர் : தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்