Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பகைத்திறம் தெரிதல்

Knowing the Quality of Hate

பொருட்பால் · WealthKural 879 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 879

Tamil original

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து.

Read the sounds · Transliteration

Ilaidhaaka Mulmaram Kolka Kalaiyunar
Kaikollum Kaazhththa Itaththu

Understand the idea · English meaning

A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller.

Connect it to life today · Modern meaning

Deal with a growing threat while it is still small; once it grows, removing it can hurt the person who tries. For example, report repeated harassment early instead of waiting until it damages the whole group.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நம்மை அழி்க்க எண்ணும் முள் மரத்தை அது வளரும்போதே அழி்த்து விடுக; வளர்ந்து விட்டால் அழிக்க எண்ணுபவரின் கையை அது அழிக்கும்.

Kalaignar

கலைஞர் : முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது போல, பகையையும், அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திட வேண்டும்