Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பெரியாரைப் பிழையாமை

Not Offending the Great

பொருட்பால் · WealthKural 896 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 896

Tamil original

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்

பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

Read the sounds · Transliteration

Eriyaal Sutappatinum Uyvuntaam Uyyaar
Periyaarp Pizhaiththozhuku Vaar

Understand the idea · English meaning

Though burnt by a fire (from a forest), one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees).

Connect it to life today · Modern meaning

A person may survive being burned by fire, but grave disrespect toward someone with great power may leave no safe escape. For example, do not casually provoke a powerful authority when a serious dispute can be resolved lawfully.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பி பிழைக்க முடியாது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தீயால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவேமாட்டார்.

Kalaignar

கலைஞர் : நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது