The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Tamil original
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
Read the sounds · Transliteration
Ventarka Vendritinum Soodhinai Vendradhooum
Thoontirpon Meenvizhungi Atru
Understand the idea · English meaning
Though able to win, let not one desire gambling; (for) even what is won is like a fish swallowing the iron in fish-hook.
Connect it to life today · Modern meaning
Even a win does not make gambling safe; it can be the bait that hides the trap. For example, a lucky first bet may tempt someone to keep playing until losses exceed the original win.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : வெற்றி பெறும் ஆற்றல் இருந்தாலும் சூதாடுவதை விரும்ப வேண்டா. அதில் பெறும் வெற்றி, தூண்டிலின் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியது போன்றதாம்.
Kalaignar
கலைஞர் : வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக் கொண்டது போலாகிவிடும்