Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

சூது

Gambling

பொருட்பால் · WealthKural 935 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 935

Tamil original

கவறும் கழகமும் கையும் தருக்கி

இவறியார் இல்லாகி யார்.

Read the sounds · Transliteration

Kavarum Kazhakamum Kaiyum Tharukki
Ivariyaar Illaaki Yaar

Understand the idea · English meaning

Penniless are those who by reason of their attachment would never forsake gambling, the gambling-place and the handling (of dice).

Connect it to life today · Modern meaning

People who refuse to give up gambling, the gambling venue, and the thrill of the game can end up with nothing. For example, someone may spend every payday at betting shops until bills and savings are gone.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : சூதாட்டத்தையும் சூதாடும் இடத்தையும் சூதாடும் திறம் படைத்த கையையும் பெருமையாக எண்ணிச் சூதாட்டத்தை இறுகப் பிடித்துக் கொண்டவர் பொருளால் இல்லாதவராகிப் போனது முன்பும் உண்டு.

Kalaignar

கலைஞர் : சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள்