Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

குடிமை

Nobility

பொருட்பால் · WealthKural 955 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 955

Tamil original

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி

பண்பில் தலைப்பிரிதல் இன்று.

Read the sounds · Transliteration

Vazhanguva Thulveezhndhak Kannum Pazhanguti
Panpil Thalaippiridhal Indru

Understand the idea · English meaning

Though their means fall off, those born in ancient families, will not lose their character (for liberality).

Connect it to life today · Modern meaning

Hard times may reduce what a generous person can give, but they need not destroy the wish to help. For example, someone with little money may still share a meal or offer practical help to a neighbor.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வன்மை வறுமையால் சுருங்கிய போதிலும், பழம் பெருமை உடைய குடியில் பிறந்தவர் தம் பண்பிலிருந்து நீங்குவதில்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தொடர்ந்து வரும் நல்ல குடியில் பிறந்தவர் தம் பொருள் கொடுத்துக் குறைந்துவிட்டபோதும், கொடுக்கும் பண்பிலிருந்து விலகமாட்டார்.

Kalaignar

கலைஞர் : பழம் பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள் வறுமையால் தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள்