Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பெருமை

Greatness

பொருட்பால் · WealthKural 973 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 973

Tamil original

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

கீழல்லார் கீழல் லவர்.

Read the sounds · Transliteration

Melirundhum Melallaar Melallar Keezhirundhum
Keezhallaar Keezhal Lavar

Understand the idea · English meaning

Though (raised) above, the base cannot become great; though (brought) low,the great cannot become base.

Connect it to life today · Modern meaning

A high title cannot make a cruel person noble, and a modest position cannot make a good person inferior. For example, an honest cleaner may show more greatness than an executive who abuses power.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நல்ல பண்புகள் ( பெருமைகள்) இல்லாதவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு உரியவர் அல்லர்; சிறிய பதவியில் இருந்தாலும் உயர்வான பண்புகளை உடையவர் பெருமை குறைந்தவர் அல்லர்.

Kalaignar

கலைஞர் : பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள்