Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பண்புடைமை

Courtesy

பொருட்பால் · WealthKural 993 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 993

Tamil original

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க

பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

Read the sounds · Transliteration

Uruppoththal Makkaloppu Andraal Veruththakka
Panpoththal Oppadhaam Oppu

Understand the idea · English meaning

Resemblance of bodies is no resemblance of souls; true resemblance is the resemblance of qualities that attract.

Connect it to life today · Modern meaning

Shared bodies or backgrounds do not make people truly alike; shared good qualities do. For example, a diverse team becomes a real community when its members show fairness, care, and honesty toward one another.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று, பொருந்தத்தக்கப் பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உறுப்புக்களின் தோற்றத்தால் பிறருடன் ஒத்திருப்பது ஒப்பு ஆகாது; உள்ளத்துடன் இணையும் பண்பால் பிறருடன் ஒத்திருப்பதே ஒப்பு ஆகும்.

Kalaignar

கலைஞர் : நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியல்ல; நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர்