Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

நன்றியில் செல்வம்

Wealth without Benefaction

பொருட்பால் · WealthKural 1003 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1003

Tamil original

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்

தோற்றம் நிலக்குப் பொறை.

Read the sounds · Transliteration

Eettam Ivari Isaiventaa Aatavar
Thotram Nilakkup Porai

Understand the idea · English meaning

A burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fame.

Connect it to life today · Modern meaning

People who care only about increasing their wealth and not about earning a good name become a burden to the world. For example, a business owner who profits greatly but never treats workers or customers fairly leaves no respected legacy.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்கு பாரமே ஆகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மற்றவரைவிட நாம் அதிகம் பொருள் சேர்க்க வேண்டும் என்று பொருள் சேர்ப்பதையே விரும்பிப் புகழை விரும்பாத மனிதரின் பிறப்பு இப்பூமிக்குப் பாரமே.

Kalaignar

கலைஞர் : புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும்