Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

நாணுடைமை

Shame

பொருட்பால் · WealthKural 1017 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1017

Tamil original

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்

நாண்துறவார் நாணாள் பவர்.

Read the sounds · Transliteration

Naanaal Uyiraith Thurappar Uyirpporuttaal
Naandhuravaar Naanaal Pavar

Understand the idea · English meaning

The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life.

Connect it to life today · Modern meaning

Those who deeply value modesty would rather accept a serious loss than protect themselves through a shameful act. For example, a student may give up an unfair advantage rather than win by cheating.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நாணத்தின் சிறப்பை அறிந்து அதன் வழி நடப்பவர் நாணமா, உயிரா,என்ற நெருக்கடி வரும்போது உயிரையே விடுவர்; உயிரைக் காக்க நாணத்தை விடமாட்டார்‌.

Kalaignar

கலைஞர் : நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்