Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

குடிசெயல் வகை

The Way of Maintaining the Family

பொருட்பால் · WealthKural 1024 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1024

Tamil original

சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்

தாழாது உஞற்று பவர்க்கு.

Read the sounds · Transliteration

Soozhaamal Thaane Mutiveydhum Thamkutiyaith
Thaazhaadhu Ugnatru Pavarkku

Understand the idea · English meaning

Those who are prompt in their eforts (to better their family) need no deliberation, such eforts will of themselves succeed.

Connect it to life today · Modern meaning

People who act promptly to improve their family's future often succeed without endless hesitation. For example, someone who begins training for a better job now is more likely to progress than someone who keeps waiting for the perfect time.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.

Kalaignar

கலைஞர் : தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்