Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

உழவு

Farming

பொருட்பால் · WealthKural 1031 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1031

Tamil original

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.

Read the sounds · Transliteration

Suzhandrumerp Pinnadhu Ulakam Adhanaal
Uzhandhum Uzhave Thalai

Understand the idea · English meaning

Agriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer.

Connect it to life today · Modern meaning

Farming is demanding, yet it is among the most important kinds of work because every other occupation depends on food from the land. For example, every meal eaten by an office worker or student begins with a farmer's labor.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.

Kalaignar

கலைஞர் : பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது