Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

இரவு

Mendicancy

பொருட்பால் · WealthKural 1053 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1053

Tamil original

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று

இரப்புமோ ரேஎர் உடைத்து.

Read the sounds · Transliteration

Karappilaa Nenjin Katanarivaar Munnindru
Irappumo Reer Utaiththu

Understand the idea · English meaning

There is even a beauty in standing before and begging of those who are liberal in their gifts and understand their duty (to beggars).

Connect it to life today · Modern meaning

There is dignity in asking an open-hearted person who understands their duty to help those in need. If a student honestly explains a hardship to a generous teacher, the request itself is honorable.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஒளிவு மறைவு இல்லாத மனம் உடையவராய், இது என்கடமை என்று அறிபவர் முன்னே நின்று, ஒன்றை அவரிடம் கேட்பதும் கேட்பவர்க்கு அழகுதான்.

Kalaignar

கலைஞர் : உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமையுடையதே யாகும்