Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கயமை

Baseness

பொருட்பால் · WealthKural 1073 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1073

Tamil original

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்.

Read the sounds · Transliteration

Thevar Anaiyar Kayavar Avarundhaam
Mevana Seydhozhuka Laan

Understand the idea · English meaning

The base resemble the Gods; for the base act as they like.

Connect it to life today · Modern meaning

Base people resemble gods only in one narrow sense: they do whatever they please without restraint. A person who ignores every rule may feel powerful, but that freedom is not the wisdom of a god.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர்.

Kalaignar

கலைஞர் : புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்