Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கயமை

Baseness

பொருட்பால் · WealthKural 1077 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1077

Tamil original

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்

கூன்கையர் அல்லா தவர்க்கு.

Read the sounds · Transliteration

Eerngai Vidhiraar Kayavar Kotirutaikkum
Koonkaiyar Allaa Thavarkku

Understand the idea · English meaning

The mean will not (even) shake of (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists.

Connect it to life today · Modern meaning

The mean will not share even leftovers with the vulnerable, but they may give something to a person strong enough to hurt them. Someone who tips a threatening bully but ignores a hungry worker reveals how fear, not generosity, guides them.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தாடையை உடைக்கும் முறுக்கிய கை இல்லாதவர்க்குக் கயவர், தாம் உண்டு கழுவிய ஈரக் கையைக்கூட உதறமாட்டார்.

Kalaignar

கலைஞர் : கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கைகைக்கூட உதற மாட்டார்கள்