Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

தகையணங்குறுத்தல்

The Pre-marital love

காமத்துப்பால் · LoveKural 1083 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1083

Tamil original

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கட்டு.

Read the sounds · Transliteration

Pantariyen Kootren Padhanai Iniyarindhen
Pentakaiyaal Peramark Kattu

Understand the idea · English meaning

I never knew before what is called Yama; I see it now; it is the eyes that carry on a great fight with (the help of) female qualities.

Connect it to life today · Modern meaning

He never understood what people meant by Death until he met the deadly power of this woman's fighting eyes. A confident glance from someone you like can feel so powerful that you suddenly forget what to say.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : எமன் என்று நூலோர் சொல்ல முன்பு கேட்டிருக்கிறேன்; பார்த்தது இல்லை; இப்போது தெரிந்து கொண்டேன். பெண்ணிற்கே உரிய நல்ல குணங்களுடன் பெரிதாய்ப் போரிடும் கண்களையும் உடையது தான் எமன்.

Kalaignar

கலைஞர் : கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன் அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை