தகையணங்குறுத்தல்
The Pre-marital love
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Nokkinaal Nokkedhir Nokkudhal Thaakkanangu
Thaanaikkon Tanna Thutaiththu
Understand the idea · English meaning
This female beauty returning my looks is like a celestial maiden coming with an army to contend against me.
Connect it to life today · Modern meaning
Her answering glance feels like a force that has returned with an entire army to overwhelm him. When someone you admire suddenly meets your eyes, one small look can make your nervousness feel enormous.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : என் பார்வைக்கு எதிராக அவள் என்னைப் பார்ப்பது, தானே தாக்கி எவரையும் கொல்லும் ஒரு தெய்வம், தாக்குவதற்குப் படைகளையும் கூட்டி வந்ததது போல் இருக்கிறது.
Kalaignar
கலைஞர் : அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானெருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது