Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

குறிப்பறிதல்

Recognition of the Signs

காமத்துப்பால் · LoveKural 1094 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1094

Tamil original

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.

Read the sounds · Transliteration

Yaannokkum Kaalai Nilannokkum Nokkaakkaal
Thaannokki Mella Nakum

Understand the idea · English meaning

When I look, she looks down; when I do not, she looks and smiles gently.

Connect it to life today · Modern meaning

When he looks at her, she looks at the ground; when he looks away, she watches him and smiles softly. A shy person may avoid eye contact during a conversation but smile when they think they are unobserved.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நான் அவளை பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப் பார்ப்பாள், நான் பார்க்காதபோதோ என்னைப் பார்த்து மெல்ல தனக்குள்ளே சிரிப்பாள்.

Kalaignar

கலைஞர் : நான் பார்க்கும்போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காத போது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா?