குறிப்பறிதல்
Recognition of the Signs
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Tamil original
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
Read the sounds · Transliteration
Seraaach Chirusollum Setraarpol Nokkum
Uraaarpondru Utraar Kurippu
Understand the idea · English meaning
Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangers.
Connect it to life today · Modern meaning
Brief sharp words and hostile-looking glances can be signs of lovers pretending to be strangers. Two people who tease each other in public may be protecting a private bond, not starting a real quarrel.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : (ஆம். இப்போது தெரிகிறது) கோபம் இல்லாமல் பேசும் பேச்சும், பகைவர் போன்ற பார்வையும், யாரே போலத் தோன்றி நட்பாவார் காட்டும் அடையாளங்கள்.
Kalaignar
கலைஞர் : பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்