Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

குறிப்பறிதல்

Recognition of the Signs

காமத்துப்பால் · LoveKural 1096 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1096

Tamil original

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்

ஒல்லை உணரப் படும்.

Read the sounds · Transliteration

Uraaa Thavarpol Solinum Seraaarsol
Ollai Unarap Patum

Understand the idea · English meaning

Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood.

Connect it to life today · Modern meaning

Even if she speaks as though they are strangers, her words soon show that no anger lies beneath them. A person who answers curtly but still checks that you are okay may be hiding affection rather than hostility.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : (பேசினேன்) அவள் யாரே எவரோ என்று பதில் சொன்னாள்; சொன்னாலும், மனத்தில் பகை இல்லாத அவளது சொல்லின் பொருள் விரைவில் அறியப்படும்.

Kalaignar

கலைஞர் : காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்