நலம் புனைந்துரைத்தல்
The Praise of her Beauty
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Anichchappook Kaalkalaiyaal Peydhaal Nukappirku
Nalla Pataaa Parai
Understand the idea · English meaning
No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem.
Connect it to life today · Modern meaning
The beloved is so delicate that even an anicham flower becomes painful if its stem is left on. The exaggerated image humorously shows how a small careless detail can trouble someone very sensitive.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : என் மனைவி தன் மென்மையை எண்ணாமல் அனிச்சம்பூவை அதன் காம்பின் அடிப்பகுதியைக் களையாமல் அப்படியே சூடிவிட்டாள். அதனால் நொந்து வருந்தும் இவள் இடுப்பிற்கு நல்ல மங்கல ஒலி இனி ஒலிக்காது.
Kalaignar
கலைஞர் : அவளுக்காக நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்