Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

அலர் அறிவுறுத்தல்

The Announcement of the Rumour

காமத்துப்பால் · LoveKural 1146 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1146

Tamil original

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று.

Read the sounds · Transliteration

Kantadhu Mannum Orunaal Alarmannum
Thingalaip Paampukon Tatru

Understand the idea · English meaning

It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent.

Connect it to life today · Modern meaning

The lovers met for only one day, but the rumor spread as widely as the old image of a serpent seizing the moon in an eclipse. A brief conversation at an event can become the story everyone repeats by the next morning.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!

Kalaignar

கலைஞர் : காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் ``கிரகணம்'' எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது