பிரிவாற்றாமை
Separation unendurable
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Tamil original
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.
Read the sounds · Transliteration
Aridhaatri Allalnoi Neekkip Pirivaatrip
Pinirundhu Vaazhvaar Palar
Understand the idea · English meaning
As if there were many indeed that can consent to the impossible, kill their pain, endure separation and yet continue to live afterwards.
Connect it to life today · Modern meaning
Many people may agree to a painful separation, survive the grief, and keep living afterward—but I do not know how I could. When a partner leaves for work or duty, staying strong can feel possible for others and impossible for you.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு,( பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும், விட்டு பிரிந்த பின் பொருத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : சம்பாதிப்பதற்குக் கணவன் பிரிந்தால் அவன் பிரிவைத் தாங்கிக் கொண்டு, பிரிவுத் துன்பத்தையும், விட்டுவிட்டு, அரிய செயலாற்றி உயிர் வாழும் பெண்கள் பலர் இருக்கின்றனர்.
Kalaignar
கலைஞர் : காதலர் பிரிந்து செல்வதற்கு ஒப்புதல் அளித்து, அதனால் ஏற்படும் துன்பத்தைப் போக்கிக் கொண்டு, பிரிந்த பின்னும் பொறுத்திருந்து உயிரோடு வாழ்பவர் பலர் இருக்கலாம்; ஆனால் நான்?