Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

படர்மெலிந் திரங்கல்

Complainings

காமத்துப்பால் · LoveKural 1170 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1170

Tamil original

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்

நீந்தல மன்னோஎன் கண்.

Read the sounds · Transliteration

Ullampondru Ulvazhich Chelkirpin Vellaneer
Neendhala Mannoen Kan

Understand the idea · English meaning

Could mine eyes travel like my thoughts to the abode (of my absent lord), they would not swim in this flood of tears.

Connect it to life today · Modern meaning

If my eyes could travel to my beloved as easily as my thoughts do, they would not have to swim through tears. When you cannot visit someone you miss, your mind goes there while your eyes remain stuck at home.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என்‌ கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : என் மனம் போலவே என் கண்களும் என்னவர் இருக்கும் ஊருக்குச் செல்ல முடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்தமாட்டா.

Kalaignar

கலைஞர் : காதலர் இருக்குமிடத்துக்கு என் நெஞ்சத்தைப் போலச் செல்ல முடியுமானால், என் கருவிழிகள், அவரைக் காண்பதற்குக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது