பசப்புறு பருவரல்
The Pallid Hue
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Pasandhaal Ivalenpadhu Allaal Ivalaith
Thurandhaar Avarenpaar Il
Understand the idea · English meaning
Besides those who say “she has turned sallow” there are none who say “he has forsaken her”.
Connect it to life today · Modern meaning
People say only that she has grown pale; no one says that her beloved has left her. Others may notice the visible sadness while ignoring the separation that caused it.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : இவள் பிரிவால் வருத்திப் பசலை நிறம் அடைந்தாள் என்ற பழி சொல்வதே அல்லாமல், இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார் என்று சொல்பவர் இல்லையே!
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : இங்கோ இவள் பசலை உற்றாள் என்று சொல்கிறார்களே தவிர, இந்தப் பெண்ணை விட்டுவிட்டு அவர் போய்விட்டாரே என்று சொல்பவர் ஒருவரும் இல்லை.
Kalaignar
கலைஞர் : இவள் உடலில் பசலை நிறம் படர்ந்தது எனப் பழித்துக் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பது தான் என்று சொல்பவர் இல்லையே